பொது தனியன்கள்



(1)

ஸ்ரீ மணவாள மாமுனிகள் தனியன்
அழகிய மணவாளன் அருளிச்செய்தது

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர பிரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முனிம்

அர்த்தம்

ஸ்ரீசைலேசனுடய பரம கிருபைக்கு பாத்திரமாய்
உடையவராயும், ஞானம்-பக்தி முதலிய குணப்
பிரவாகம் நிறைந்தவராயும், ஸ்ரீ ராமாநுஜரை
சதா பக்தியுடன் போற்றுபவராய் விளங்கும்
ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்.
(2)

குரு பரம்பரை தனியன்
கூரத்தாழ்வான் அருளிச்செய்தது

லக்ஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்

அர்த்தம்

லக்ஷ்மி நாதனை தொடங்கி, நடுவிலுள்ள
நாதமுனி மற்றும் முடிவிலுள்ள என்னுடய
ஆசார்ய குரு பரம்பரையை வணங்குகிறேன்.
முதலாசார்யானான ஸ்ரீதரன் சாஸ்திரங்களை
லக்ஷ்மியிடம் வழங்கினார். இதை தொடர்ந்து
விஷ்வக்ஸேனர், நம்மாழ்வார் மற்றும் ஒருவருடய
ஆசாரியன்வரை வழி வழியாக இவை
வழங்கப்பட்டு வருகின்றன.
(3)

எம்பெருமானார் தனியன்
கூரத்தாழ்வான் அருளிச்செய்தது

யோ நித்யம் அச்யுத பதாம்புஜ யுக்மருக்ம
வ்யாமோஹதஸ் ததிதராணி த்ருணாயமேநே
அஸ்மத் குரோர் பகவதோsஸ்ய தயைகஸிந்தோ:
ராமாநுஜஸ்ய சரணௌ ஶரணம் ப்ரபத்யே

அர்த்தம்

பகவான் அச்சுதனிடம் கொண்ட அதீத
பிரேமையினால் ஸ்ரீ ராமாநுஜர் உலகத்திலுள்ள
பொருட்களையும் ஆசைகளையும் ஒரு புல்லுக்கு
சமமாகவே கருதினார். கல்யாண குணங்களை
கொண்டவரும், தயையின் கடலுமான அவரே
நமக்கெல்லாம் குரு. அவர்
திருவடிகளுக்குச் சரணம்.
(4)

நம்மாழ்வார் தனியன்
ஆளவந்தார் அருளிச்செய்தது

மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியமேந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா

அர்த்தம்

இதுவரை பெறுமதிப்புடன் கருதிவந்த என்னுடய
தாய், தந்தை, குழந்தைகள் மற்றும்
சம்பத்துக்கள் யாவும் இனி நம்மாழ்வார்
திருவடியல்லாது மற்றொன்றாகாது. வகுளாபரண
மாலை சூடப்பட்டவரும் , எல்லோராலும்
போற்றப்படுபவருமான நம்மாழ்வானின்
திருவடிகளை என் தலையால் வணங்குகிறேன்.
(5)

ஆழ்வார்கள் உடயவர் தனியன்
ஸ்ரீ பராசர பட்டர் அருளிச்செய்தது

பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலசேகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்திர மிஶ்ராந்
ஸ்ரீமத் பராங்குஶமுனிம் ப்ரணதோsஸ்மி நித்யம்

அர்த்தம்

நம்மாழ்வாரே முழு பகவத் ஸ்வரூபம், மற்ற
ஆழ்வார்கள் அவருக்கு அவயங்கள்.
பூதத்தாழ்வாரே திருமுடி, பொய்கை, பேய்
இரு கண்கள், முகமே பட்டர்பிரான், கழுத்து
திருமழிசை, இரு கைகளோ குலசேகரனும்
திருப்பாணனும், தொண்டரடிதான் திருமார்பு,
கலியன் நாபி, யதிராஜரே நம்மாழ்வாரின்
திருவடி. இத்தனியன் ஸ்ரீ நன்ஜீயரின் தூண்டுதலின்
பேரில் ஸ்ரீ பராசர பட்டரால் அருளிச்செய்யப்பட்டது.
(6)

பெரியாழ்வார் தனியன்கள்
ஸ்ரீ நாதமுனிகள் அருளிச்செய்தது

குருமுக மனதீத்ய ப்ராஹ வேதான சேஷாந்
நரபதி பரிக்லுப்தம் ஶுல்க மாதாது காம:
ஶ்வஶுரமமர வந்த்யம் ரங்கநாதஸ்ய ஸாக்ஷாத்
த்விஜ குல திலகம் தம் விஷ்ணு சித்தம் நமாமி

அர்த்தம்

ஒரு சமயம் பாண்டிய மன்னன் பரதத்துவம்
என்ன என்று அறிந்துகொள்ள பண்டிதர் மற்றும்
சாஸ்திர வல்லுநர்களை சபைக்கு அழைத்தான்.
பெரியாழ்வாரோ குரு முகமாக சாஸ்திரங்களை
அறிந்தவர் அல்லர். ஆனால் நாராயணனின்
அருள் பரிபூர்ணமாய் இருந்ததால், நாராயணனே
வேதங்களாலும் வேதாந்தங்களாலும் போற்றப்படும்
பரம் பொருள் என நிரூபித்தார். பாண்டிய
மன்னன் நிறைய பரிசுகளையும்
பொற்காசுகளையும் ஆழ்வாருக்கு வழங்கினான்.
பிராஹ்மண குல திலகம், ஸ்ரீ ரங்கநாதனின்
மாமனார், விஷ்ணுசித்தன் என்று அழைக்கப்படும்
பெரியாழ்வாருக்கு என்னுடைய வணக்கங்கள்.
(7)

பாண்டிய பட்டர் அருளிச்செய்தது

மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூ
ரென்று ஒருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம்
கீழ்மையினிற் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே! வந்து

அர்த்தம்

அழகான மதில் சூழ் இடமான ஸ்ரீவில்லிபுத்தூர்
என்ற பெயரை ஒரு தடவை யார் சொன்னாலும்
எங்கள் சிரத்தை அவர் திருவடியில் வைப்போம்.
ஸ்ரீமன் நாராயணனே பரதத்துவம் என நிரூபித்து
பரிசும் பொருளும் அள்ளிச் சென்றவர்
பெரியாழ்வாரே என்று அறுதியிட்டு
கூறுவோம். ஏ மனமே ! நாராயணனே
பரதத்துவம் என்று உறுதியாகிவிட்டதால்
எங்களுக்கு நரகத்தின் வாசல் மூடப்பட்டுவிட்டது.
(8)

பாண்டிய பட்டர் அருளிச்செய்தது

பாண்டியன் கொண்டாடப் பட்டர்
பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கமெடுத்தூத வேண்டிய
வேதங்களோதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று

அர்த்தம்

வேதப்பிரமாணங்களை கொண்டு ஸ்ரீமன்
நாராயணனே பரதத்துவம் என நிரூபித்து பரிசு
பெற்ற பெரியாழ்வாரே நமக்குத் தஞ்சம்.
ஆழ்வாரை 'பட்டர்பிரான் வருகிறார்' என்று
வாத்தியங்கள் முழங்க கொண்டாடினான்
பாண்டிய மன்னன். பெரியாழ்வார்
பாதங்களை நாம் பற்றுவோமாக.




3 comments:

  1. அருமையான பதிவு.. மிக அழகாக அர்த்தத்துடனும், ஆடியோவுடனும் பதிந்துள்ளது அனைவருக்கும் உபயோகமாக இருக்கு.

    ReplyDelete
  2. Namaskaram. Very good publication. Unfortunatelt, the audio is not working. Request look into this aspect. Dhanyosmi. Adiyen

    ReplyDelete
  3. Audio restored Swamy. Adiyen.

    ReplyDelete

Please feel free to leave your comments. I would love to see them. Thanks.